இங்கிலாந்தில் மாணவர் விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

11/07/2012 07:30

 

இங்கிலாந்தில் மாணவர் விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
 
இங்கிலாந்தில் சீனா, இந்தியா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்கள் படித்து முடித்தவுடன் வேலை செய்ய வழங்கப்பட்டு வந்த விசா ரத்து செய்யப்பட்டது.

மேலும் மாணவர் விசாவுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு இந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.

ஆனால் ஜேர்மனியில் மாணவர் விசாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் குறைந்த கட்டணத்தில் சர்வதேச தரமுள்ள கல்வி ஜேர்மனியில் வழங்கப்படுகிறது. இதனால் கடும் போட்டி நிலவுகிறது.

வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறைந்தால் இங்கிலாந்துக்கு வருவாயும் குறைந்துவிடும் என்று பல்கலைக்கழங்கள் சுட்டிக் காட்டின. இதையடுத்து மாணவர் விசாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் டேவிட் கமரூன் அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து முடித்தவுடன் 2 ஆண்டு வேலை செய்வதற்கான விசா மீண்டும் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.