”இஸ்லாமிய அரசியல்” தமிழில் வெளிவந்துள்ளது

06/07/2012 11:00

 

”இஸ்லாமிய அரசியல்” தமிழில் வெளிவந்துள்ளது

 

 அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு நேற்று வியாழகிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம் .எல் .ஏ. காதர்  நிகழ்த்தினார். இந்த வெளியீட்டு நிகழ்வில் முக்கிய முஸ்லிம் அரசியல்,சமூக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் , கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணியின் பணிப்பாளர்  அஷ்ஷெய்க் நஜாஹ் முஹம்மத் (இஸ்லாஹி) மற்றும் அஷ்ஷெய்க் உஸைர் (இஸ்லாஹி) ஆகியோர் இஸ்லாமிய அரசியல் நூல் தொடர்பில் உரையாற்றினர்.

குறித்த நூல் வெளியீடு -நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி – Front for justice and peace ( FJP) என்ற அமைப்பு மேற்கொண்டது .