விளம்பரங்க​ளை அறிமுகப்படு​த்துகின்றது ஸ்கைப்

16/06/2012 07:53

 

விளம்பரங்க​ளை அறிமுகப்படு​த்துகின்றது ஸ்கைப்
 
ஒன்லைன் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு மில்லியன் கணக்கான பயனர்களைத் தன்னகத்தே கொண்டு ஸ்கைப்(Skype) முன்னணியில் திகழ்கிறது.

ஸ்கைப் இலவசமான அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதிகளை கொண்டுள்ள போதிலும், கைப்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தும் போது ஸ்கைப் கிரடிட் அவசியம் காணப்படுதல் வேண்டும்.

இவ்வாறு ஸ்கைப் கிரடிட்டினைக் கொண்டிராதவர்கள் குறித்த ஒரு நேரத்தில் ஒரு நபருக்கான அழைப்பை மேற்கொள்ளும்போது(கான்பரன்ஸ் அழைப்பு தவிர்ந்த) தமது விளம்பரங்களை இடம்பெறச் செய்யும் முயற்சியில் ஸ்கைப் நிறுவனம் இறங்கியுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் அறிமுகமாகவுள்ள Conversation Ads எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய வசதியில் தமது விளம்பரங்களை இடம்பெறச் செய்வதற்கென இதுவரையில் 55 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.