மின்னஞ்சல் செய்திகளை Encrypt செய்து அனுப்புவதற்​கு

26/07/2012 10:02

 

மின்னஞ்சல் செய்திகளை Encrypt செய்து அனுப்புவதற்​கு
 
தகவல்களை மின்னஞ்சல்களினூடு பரிமாற்றிக் கொள்ளும் போது மிக முக்கியமான தகவல்கள் Hackers-னால் இடைமறித்து திருடப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக குறித்த மின்னஞ்சல் செய்திகளை Encrypt செய்து பரிமாற்றிக் கொள்வது சாலச்சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

இவ்வாறு ஜிமெயில் செய்திகளை Encrypt செய்து அனுப்புவதற்கான வசதியை Safe Gmail எனப்படும் கூகுள் குரோம் நீட்சி ஒன்று தருகின்றது.

இதனைத் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிய பின், கணனியை ஒருமுறை மீள்தொடக்கம் செய்யவும்.

அதன் பின்னர் ஜிமெயிலில் செய்தியை டைப் செய்யும் பக்கத்தில் மேலதிக பட்டன் ஒன்று தென்படும்.

வழமையான முறையில் செய்தியை டைப் செய்து விட்டு பின்னர் குறித்த பட்டனைப் பயன்படுத்தி செய்தியை Encrypt செய்து Send என்பதை அழுத்தவும்.

இதன் போது மின்னஞ்சலை பெறுபவருக்கு ஒரு இணைப்பு மட்டுமே செல்லும். அவர் குறித்த இணைப்பில் கிளிக் செய்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை அளித்து Encrypt செய்யப்பட்ட செய்தியை Copy செய்து Text box இனுள் Paste செய்ய வேண்டும்.

இணையதள முகவரி