போகம்பரை சிறைச்சாலையில் இனி கைதிகளுக்கு இடமில்லை

06/02/2014 15:54
கண்டி -போகம்பர சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளும் நாளைய தினம் அங்கிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது எஞ்சியுள்ள சுமார் 500 கைதிகளும் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.
 
போகம்பர சிறைச்சாலையில் இருந்து 1,100 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவில் போகம்பர சிறைச்சாலை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம மேலும் சுட்டிக்காட்டினார்.-சக்தி நியூஸ்