பேஸ்புக்கி​ல் உங்கள் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு

03/07/2012 08:07

 

பேஸ்புக்கி​ல் உங்கள் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு
 
முன்னணி சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் உங்களால் கொடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இரகசியத் தகவல்கள் உட்பட்ட அனைத்து தகவல்களையும் இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதனால் அவற்றினை பேக்கப் செய்து (தரவிறக்கம்) வைத்திருப்பது அவசியம் ஆகும்.

இவ்வாறு தனிப்பட்ட தகவல்களைத் தரவிறக்கும் வசதி பேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

முதலில் Account Settings menu இனை திறந்து அங்கு காணப்படும் Download a copy of your Facebook data என்பதனைத் தெரிவு செய்யவும். அதனைத் தொடர்ந்து Start My Archive என்பதனை தெரிவு செய்யவும்.

குறித்த செயன்முறை ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு பாதுகாப்பு செய்தி பெறப்படும். பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி தகவல்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.