கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்

05/07/2012 08:23

 

கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்

 

 

கலீபா அப்துல் மஜீத்

86 வது வருடதிற்கு   இன்னும் 31 நாட்கள் இருகின்றன

1924 மார்ச் 3 இம் திகதி  திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலிபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீபா அப்துல் மஜீத் இவர் கிலாபத் அழிக்கபட்டு ஒரு மணித்தியால அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி, முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது , ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும் கடந்தும் இன்னும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமை ஏற்படுத்த படவில்லை.

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்க பட்டு தேசிய வாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது தேசிய வாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தி முஸ்லிம் உம்மாஹ்வின் முதுகில் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது அழிக்கபட்ட கிலாபத்தை உலகில் மீண்டும் ஏற்படுத்த பல இயக்கங்கள் பல முறைகளை பயன்படுத்தி முயற்சிகிறது இவை முஸ்லிம் உம்மத் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை கட்டியம் கூறுகிறது