இணையப் பக்கங்களை PDF கோப்பாக மாற்றுவதற்​கு

16/07/2012 09:22

 

இணையப் பக்கங்களை PDF கோப்பாக மாற்றுவதற்​கு
 
இணைய இணைப்பு இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பார்வையிடக்கூடிய இணையத்தளங்களை அவ்வாறு இணைய இணைப்பு இல்லாத சந்தரப்பங்களில் பார்வையிட முடியாது.

அதனை மீறி குறித்த இணையப் பக்கத்தினை சேமித்து பின் பார்க்க முடியுமாயினும் அவற்றில் சில அம்சங்கள் செயற்பாட்டு நிலையில் இல்லாது போகலாம்.

இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு குப்பிட்ட இணையப் பக்கங்களை PDF கோப்பு வடிவில் சேமித்து பின் எந்த நேரத்திலும் அவற்றினை தடைகள் எதுவுமின்றி பார்வையிட முடியும்.

இணையப் பக்கத்தினை PDF கோப்பாக மாற்றுவதற்கு Pdfy.me என்ற இணையத்தளம் உதவி செய்கின்றது. இத்தளத்தில் ஒருமுறை கேட்கப்படும் விபரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் போதும். பின் PDF கோப்பாக மாற்றப்படவேண்டிய தளத்தின் url இனைக் கொடுத்து PDF கோப்பாக சேமித்துக் கொள்ள முடியும்.

இதேவேளை இத்தளத்தினை குரோம் உலாவியில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய நீட்சியும் காணப்படுகின்றது.

தரவிறக்க சுட்டி