( HD வீடியோ இணைப்பு) உலகின் அதிவேக மனித இயந்திரம் உசேன் போல்ட். மீண்டும் தன்னை நிரூபித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.

06/08/2012 09:44

 

( HD வீடியோ இணைப்பு) உலகின் அதிவேக மனித இயந்திரம் உசேன் போல்ட். மீண்டும் தன்னை நிரூபித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.

 

லண்டன் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதி சுற்று ஓட்டப்பந்தயத்தில் உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் முதலாவதாக வந்தார்.

100 மீட்டர் ஓட்டத்தில் அதிவேக வீரரான உசைன் போல்ட் பந்தய தூரத்தை கடக்க 9.63 வினாடிகள் மட்டுமே எடுத்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

அவரை தொடர்ந்து பின்னால் வந்த சக நாட்டு வீரரும் பயிற்சி தோழருமான யோகன் ப்ளேக் 9.75 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.79 வினாடிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.